‘ஆம்’ எனில் ஆம்!
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான். சங். 55:20
'நாளை மதியம் 2 மணிக்கு நான் அங்கே இருப்பேன்' என்று என் நண்பன் வாக்குப் பண்ணினான். ஆனால், அவன் வரவே இல்லை!
உங்கள் வாழ்க்கையிலும் பல நபர்கள் உங்களுக்கு அளித்த தங்கள் வாக்கை முறித்துப் போட்டிருக்கலாம். சத்தியம் செய்வது விரும்பத்தக்கதல்ல. ஆனால், உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள் (யாக். 5:12).
வேதத்திலே நமக்கு ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்கள் உள்ளன. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் எப்போதும் ‘ஆம்’ என்றும் ‘ஆமென்’ என்றும் இருக்கிறதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம் (2 கொரி. 1:19-20). அவர் பண்ணின வாக்கை முறிக்கிறதில்லை (எபி 6:18). அவர் ஆபிரகாமுக்கும், வேதத்திலுள்ள மற்றும் பலருக்கும் அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார்.
நீங்கள் எப்போதாவது மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்கை முறித்ததுண்டா? உங்கள் எஞ்சிய வாழ்நாளில், நீங்கள் எவ்விதம் தேவனையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் நம்ப விரும்புகிறீர்கள்?
தேவனுக்கும், பிறருக்கும் நீங்கள் கொடுத்த வாக்கின்படியே செய்யுங்கள்; தேவன் செய்கிறாரே!
ஜெபம்: கர்த்தாவே! என் வாழ்நாளெல்லாம் உமது வாக்குத்தத்தங்களை விடாமல் பற்றிப் பிடித்துக் கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment