ஆனால் நானோ...


நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். கர்த்தர் என்னை இரட்சிப்பார். சங். 55:16.

ஒரு நாள், என் வீட்டின் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் என் நண்பர் ஒருவருக்கு அழைப்பு விடுத்தேன். "தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி! ஆனால் நான்..." என்று அவர் கூறின பதில் முழு நிலைமையையும் மாற்றி விட்டது!

மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலுள்ள "நானோ" என்ற பதம் தாவீதை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. அதற்குக் காரணம், அவருக்கு  இப்பிரபஞ்சத்தையே சிருஷ்டித்தவருடன் இருந்ததான தொடர்பு! 

தேவனுடைய குடும்பத்திலே நான்  ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து, நான் முன்பிருந்த அதே நபரல்ல (2கொரி 5:17). முன்பு மரித்தவனாய் இருந்தேன், இப்போதோ உயிர்த்தவனாய் உள்ளேன்; காணாமற்போனேன், ஆனால், கண்டுபிடிக்கப்பட்டேன்; குருடனாய் இருந்தேன், இப்போதோ, நான் காண்கிறேன் (லூக் 15:24).

நான் உருவாக்கப்படுமுன்னரே தேவன் என்னை அறிந்தார் (எரே. 1:4-5). அவர் என்னை பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கினார் (சங் 139:13-14). நான் சிறப்பாகத் தெரிந்துகொள்ளப்பட்டவன். நான் தேவனுக்குச் சொந்தமானவன் (1பேது 2:9). 

உங்கள் சிருஷ்டிகருக்கும் உங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் நீங்கள், "நானோ..." என்ற வாக்கியத்தை எவற்றைக் கொண்டு உங்களுக்காக பூர்த்தி செய்வீர்கள்??

உங்களது "நானோ…" மற்றவர்களுக்கு முன்பாக உங்களின் பெரும்பான்மையான அடையாளத்தை வரையறுக்கிறது! 

ஜெபம்: கர்த்தாவே! 'உம் நிமித்தம் நான் யாராயிருக்கிறேன்' என்ற எனது மதிப்பை ஓரளவிற்காவது புரிந்து கொள்ள எனக்கு தயவுசெய்து உதவி செய்தருளும்! ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

How long will he forgive?

Slippery sliding cliff!

Who is truly wise?