வெண்ணெய் போல் ...
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப் போல மெதுவானவைகள். அவன் இருதயமோ யுத்தம். அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். சங். 55:21.
சில நாட்களுக்கு முன்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில், ஏதோ ஒன்றின் விலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக அவரிடம், “பேசுவதைக் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா? ஒரு தயாரிப்பைப் பற்றி விவரிக்கையில் உண்மையை மட்டும் சொல்லுங்கள்” என்று கூற வேண்டியதாயிற்று.
மிகவும் தாழ்மையாகவும், மென்மையாகவும் இருப்பது போலத் தோற்றமளிப்பது ஒரு காரியம் என்றால், உண்மையாகவே தாழ்மையாகவும், மென்மையாகவும் இருப்பது மற்றொரு காரியம். இதற்கொத்த நடத்தை சாத்தானுக்கு உண்டு. அவன் மிகவும் வசீகரமான தோற்றமும், கவர்ச்சியான பேச்சும் உடையவன்.
'மாய்மாலத்தை விட முற்கோபம் எவ்வளவோ மேல்' என்று சில சமயங்களில் நான் சிந்திக்கிறதுண்டு. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், வேதபாரகரை மாயக்காரர் என்று குறிப்பிட்டார் (மத் 23).
'மாய்மாலம்' உங்கள் வாழ்வில் ஏதேனும் பங்கு வகிக்கிறதா? நீங்கள் எப்பொழுதும் உண்மையாய் இருக்க, எவ்விதம் தேவனை நம்ப விரும்புகிறீர்கள்?
நீங்கள் என்னவாக இல்லையோ, அதைப் போல் ஒருபோதும் தோற்றமளிக்காதீர்கள். அது சாத்தானின் நடத்தை.
ஜெபம்: கர்த்தாவே! நான் ஒரு மாயக்காரனாய் இல்லாமல், உண்மைத்தன்மையில் வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment