காலை, மதிய மற்றும் இரவு உணவு!
அந்தி, சந்தி, மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார். சங் 55:17.
என் வாழ்நாளெல்லாம், மிகவும் உண்மையுள்ளவனாய், மறக்காமல் செய்து கொண்டிருக்கிற ஒரு காரியம் உண்டென்றால் அது எனது காலை, மதிய மற்றும் இரவு உணவு உட்கொள்ளல்! தாவீதும், ஒரு நாளின் மூன்று வேளையும் ஏதோ ஒன்றைச் செய்வதாகக் கூறுகிறார். அது என்னவென்றால், 'தேவனை நோக்கி முறையிடுவது' (சங் 55:17).
உணவை வேளை தவறாமலும், அடிக்கடியும் உட்கொள்வது முக்கியம் தான். உடற்பயிற்சி செய்வதும் நல்லதே (1தீமோ 4:7). ஆனால், மேற்கூறிய அட்டவணையைக் கடைப்பிடிப்பது உங்கள் சரீரத்திற்கு மட்டுமே உதவும்.
உங்களது வெளிப்பிரகாரமான சரீரத்திற்கு எத்தனை முறை உணவளிக்கிறீர்களோ, குறைந்தபட்சம் அத்தனை முறையாவது உங்கள் உள்ளான மனிதனையும் போஷிக்க நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆவி தொடர்ந்து உயிர் பிழைக்க கண்ணீரே போதுமானது (சங் 42:3).
நீங்கள் தேவனைத் தீவிரமாய் நேசிக்கிறீர்களென்றால், உங்கள் ஆவியை போஷியுங்கள். மற்றவர்களின் ஆவியையும் கூட நீங்கள் போஷிக்க வேண்டும் (யோவான் 21:15-22).
தேவனோடு கூட எத்தனை நீண்ட காலமாகவும், எவ்வளவு ஆழமான தொடர்பிலும் நீங்கள் இருக்கிறீர்களோ ,அந்த அளவிற்கு உங்களுடைய ஆவியும் வலிமை மிக்கதாக இருக்கும்.
ஜெபம்: கர்த்தாவே! எவ்வளவு தேவையோ அவ்வளவிற்கு உம்மை நோக்கி முறையிடவும், உம்மை உட்கொள்ளவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment