அசைக்கப்பட்டீர்களோ?
கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங். 55:22.
நான் சிறுவனாய் இருக்கையில், முந்திரிப்பழங்களை உண்பதில் எனக்கு விருப்பம் இருந்தது. ஒருமுறை, பழங்கள் நிறைந்திருந்த ஓர் பெரிய முந்திரி மரத்தின் அருகே சென்றேன். தரையிலிருந்தவாறே அந்த மரத்தை உலுக்கியும், வெற்றிகரமாக ஒரு பழத்தைக் கூட என்னால் பறிக்க முடியவில்லை. எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அசைக்கப்படக்கூடியது, அசைக்கப்படக்கூடாதது என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. நாமும் கூட, நமது கவனம் தவறானதினிமித்தம் அசைக்கப்படக்கூடும். வானத்தையும் பூமியையும் அசையப்பண்ண முடியும் (எபி. 12:26,27). கர்த்தர் மேல் தங்கள் பாரத்தை வைக்கிறவர்கள் அசையாமல் நிலைநிற்பார்கள் (சங். 55:22அ). நீதிமான் அசைக்கப்படுவதில்லை (சங். 55:22ஆ). கர்த்தர் மேலேயே தங்கள் கவனத்தை வைத்திருப்பவர்கள் அசைக்கப்பட முடியாது (சங்.16:8).
வாழ்வின் எத்தருணங்கள் உங்களை அசைத்திருக்கின்றன? தேவன் மேல் கவனத்தை செலுத்துவதற்கு, உங்களுக்கு உதவக்கூடிய ஒரு படி எதுவாக இருக்கக்கூடும்?
அசைக்கப்பட்டதைப் போல் உணர்கிறீர்களா? உங்கள் வேர்கள் மற்றும் அடித்தளத்தைச் சரிபாருங்கள்!
ஜெபம்: கர்த்தாவே! நான் ஒருபோதும் அசைக்கப்படாதிருக்கும்படி, என் வாழ்வின் எல்லா நாட்களிலும் உம்மை நம்ப எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment