உங்கள் சத்துருவைத் தோற்கடியுங்கள்!
ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார். அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற் போகிறார்கள். சங் 55:19.
"கடவுள் மட்டுமே நம்மை இந்தக் கொரோனா நோய்க்கிருமியிலிருந்து காப்பாற்ற முடியும்" என்று சமீபத்திலே இந்தியாவில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் ஒருவர் கூறினார். தேவனைக் கனம் பண்ணுகிற என்ன வல்லமையான அறிக்கை அது! இப்போது உலகெங்கிலும் உள்ள பல ஜனங்களும் இந்த ஆரோக்கியமான புரிந்துணர்தலுக்கு வந்துள்ளனர்.
தானல்ல, தேவனே அவர்களைத் தோற்கடிப்பார் என்று தாவீது இங்கே கூறுவதைக் கவனியுங்கள் (சங் 55:19). பெரும்பாலான வேளைகளில், நம்முடைய சுய பலத்திலேயே நம்முடைய சத்துருவுக்கு எதிராகப் போராடும்படி நாம் சோதிக்கப்படுகிறோம். 'கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்' என்ற வாக்கியம் வேதத்தில் மீண்டும் மீண்டும் பலமுறை வருகிறது (யாத். 14:14; உபா. 3:22).
தேவனுக்குப் பயப்படாதவர்கள் எளிதாகத் தோற்கடிக்கப்படுவார்கள் (சங் 55:19); நீங்கள் தேவனுக்குப் பயப்படும்போது, உங்களுடைய சத்துருக்கள் எளிதாகத் தோற்கடிக்கப்படுவார்கள். நம்முடைய உண்மையான சத்துரு ஜனங்கள் அல்ல, அவர்களைப் பெரும்பாலான நேரங்களில் கட்டுப்படுத்துகிற சாத்தானே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் சத்துரு யார் என்றும் அவனை எப்படித் தோற்கடிப்பது என்றும் உங்களுக்குத் தெரிகிறதா?
கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுகிறபோது, நம்முடைய சத்துருவால் ஜெயிக்க முடியாது!
ஜெபம்: கர்த்தாவே! என்னுடைய சத்துரு எப்பொழுதும் தோற்கடிக்கப்படும்படி, யுத்தம் பண்ணுகிற பொறுப்பை உம்மிடமே விட்டுவிட எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment