நீங்கள் எங்கே ஆராதிக்கிறீர்கள்?
B. A. Manakala
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன். ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன். சங். 57:9.
இந்த சர்வதேச நோய்த் தொற்றுப் பரவல் காலத்தில், 'ஆலயத்திற்குப் போகாமல், வீட்டிலிருந்தவாறே தேவனை ஆராதிப்பதை, நான் அவ்வளவு சௌகரியமாக உணரவில்லை' என்ற வாக்கியத்தை குறைந்தபட்சம் சில ஜனங்களிடமிருந்தாவது நான் கேட்டேன்.
தாவீது, தான் தேவனை எல்லா ஜனங்களுக்குள்ளும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் துதிப்பதாகக் கூறுகிறார்...(57:9), அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாயினும், பூமியானது தேவனை ஆராதிப்பதற்கு வசதியான ஓர் இடமாக, நமக்கு ஒருபோதும் இருக்கப்போகிறதில்லை!
உயரிய தேவ மனிதர்கள், மலைகளின் மேலும், மரங்களின் கீழும், சிறையில் இருந்தும், எங்கே இருந்தாயினும் தேவனை ஆராதித்திருக்கிறார்கள்.
எப்போதும், எல்லா இடங்களிலும், எந்த ஜனத்தின் மத்தியிலும், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த கலாச்சாரத்திலும் நாம் தேவனை ஆராதிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
பொருத்தமான இடமாக இருக்கப்போகிறதில்லை என்றாலும்கூட, எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை ஆராதிக்க, எங்ஙனம் உங்களை நீங்களே பயிற்றுவிப்பீர்கள்?
வசதியான இடமாக இல்லாத பட்சத்திலும், உண்மையான வழிபாட்டாளர்களால், அவரை எங்கேயானாலும் ஆராதிக்க முடியும்.
ஜெபம்: கர்த்தாவே, எங்கேயும், எல்லா இடங்களிலும், மிகவும் சங்கடமான இடத்திலும்கூட, உம்மை ஆராதிக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment