பயனற்ற ஆயுதங்கள்!
B. A. Manakala
கடந்தோடுகிற தண்ணீரைப் போல் அவர்கள் கழிந்து போகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது, அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது. சங். 58:7.
சில சமயங்களில், எனது சிறு பையன், "நான் உங்களை விட வலிமை வாய்ந்தவன்" என்று கூறிக் கொண்டே என்னோடு சண்டையிடுகிறான். அவன் என்னைத் தோற்கடித்துவிட்டது போல நானும் பாசாங்கு செய்ய, அது அவனுக்கு மகத்தான இன்பத்தைக் கொடுக்கிறது.
துன்மார்க்கரின் ஆயுதங்கள் உபயோகமற்றவை, உடைந்து போனவை என்று தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்களாய், அவர்களுடைய பயனற்ற ஆயுதங்களுக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா (58:3-9)?
உங்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறவனைக் காட்டிலும், உங்களில் இருக்கிறவர் பெரியவர் என்ற சத்தியத்தைப் புறக்கணியாதிருங்கள் (1 யோ. 4:4). உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் (ஏசா 54:17). அமைதியாக இருங்கள். அவரே உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார் (யாத். 14:14).
உங்களில் கிரியை செய்கிற தேவ வல்லமையைக் குறித்து, உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ளவதற்கு, நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் சத்துருவின் பயனற்ற ஆயுதங்களைப் பார்க்கும் முன்பதாகவே, உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறவர் யார் என்பதைப் பார்க்க, உங்களுக்கு நீங்களே பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, நொடிக்கு நொடி என்னோடே இருக்கிற உமது பிரசன்னத்தைப் பார்க்கும்படி, என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment