முதலாவது தேவனைத் தேடுங்கள்!
B. A. Manakala
இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள். கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். சங். 59:3.
உங்கள் அறைக்கு வெளியே, இரண்டு பேர் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒருவர் உங்களுக்கு ஒரு பரிசைக் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மற்றொருவரோ, உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் யாருக்கு பதிலளிக்க விரும்புவீர்கள்?
தன் எதிரிகளை சமாளிக்க முயற்சிக்கும் முன்னர், தாவீது இங்கே தேவனோடு பேசுகிறதைக் கவனியுங்கள். பொதுவாகவே, உங்களால் தேவனுக்கு முதலாவது பதிலளிக்க முடிந்தால், உங்கள் சத்துருக்கள் உட்பட மற்ற எல்லாவற்றையும் அவர் சிறப்பாகக் கையாண்டு விடுவார். ஆனால், உங்கள் வாழ்க்கை முறை இதற்குத் தலைகீழ் என்றால், உங்களுக்கு ஏராளமான போராட்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். "முதலில் தேவனைத் தேடுதல்" என்பது உங்கள் வாழ்வின் குறிக்கோளாய் இருக்கட்டும் (மத். 6:33).
தேவன் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்; உங்கள் சத்துருவும் தான். நீங்கள் தேவனை நம்பி, அவருக்கு முதலாவது பதிலளிக்கக் கற்றுக் கொள்வீர்களா?
தேவனும், சாத்தானும் ஒரே சமயத்தில் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிற வேளையில், உங்கள் பதிலில் முன்னுரிமை அளிப்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, என் சத்துருவைப் பற்றிக் கவலைப்படுகிறதற்கு மாறாக, உமக்கு அடிக்கடி பதிலளிக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment