என் இதயம் தூங்குகிறதா?
B. A. Manakala
என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக் கொள்வேன். சங். 57:8.
உங்கள் வயது என்ன? நீங்கள் கருவில் ஆறு வாரங்களாய் இருக்கும் போதே உங்கள் இதயத்துடிப்பு ஆரம்பித்து, இத்தனை வருடங்களாக இயங்கிக் கொண்டே இருக்கிறது.... நீங்கள் இந்த வார்த்தைகளை வாசித்துக் கொண்டிருக்கிற இப்பொழுதும் கூட!
ஆனால், இந்த இதயத்தின் மற்றொரு பக்கம் இருக்கிறது.., அது அநேகமாகத் தூங்கலாம்; அடிக்கடி எழுப்பப்பட வேண்டியதாய் இருக்கலாம். என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நான் தேவனைப் பாடித் துதிக்கத்தக்கதாக, ஒவ்வொரு சரீரப்பிரகாரமான இதயத் துடிப்பும், அதைச் செய்வதற்கு, எனது ஆவிக்குரிய இதயத்தை நினைவூட்ட வேண்டும் என விரும்புகிறேன்.
உங்கள் இதயம் தேவனுடன் தொடர்பிலேயே இருப்பதற்கு, எவ்வளவு அடிக்கடி அதற்கு நினைவூட்டல் அவசியமாய் இருக்கிறது? உங்கள் இதயம் தூங்குகிறதோ என்று சரி பார்க்கச் சொல்லி, அடிக்கடி நினைவு படுத்துகிற நபர் யாராவது உங்களுக்கு இருக்கிறார்களா?
நமது சரீரப்பிரகார இதயம் முழு விழிப்புடன் இயங்குகிறது. தனது சிருஷ்டிகரின் நோக்கத்திற்கேற்ப, வாழ்நாள் எல்லாம் அதின் பங்கைச் செவ்வனே செய்து நிறைவேற்றுகிறது. நமது ஆவிக்குரிய இதயமோ, சில சமயங்களில் தூங்குகிறது; முடிந்த வரை, அடிக்கடி அதை எழுப்புங்கள்!
ஜெபம்: கர்த்தாவே, ஒவ்வொரு கணமும் உம்மை ஆராதிக்கத்தக்கதாக , என் இதயத்தை எழுப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்!
Comments
Post a Comment