விருது வெல்லும் வாழ்க்கை!
B. A. Manakala
அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய்ப் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங். 58:11.
ஆலயத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான போட்டிக்குப் பிறகு, ஒரு பெற்றோர், "என் மகள் மிகவும் நன்றாகப் பாடினாள். அவளுக்குத் தான் இந்த போட்டியிலே முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்" என்று சொல்லக் கேட்டேன்.
உண்மையிலேயே தேவனுக்காய் வாழ்கிறவர்களுக்கு வெகுமதி உண்டு (சங். 58:11). ஆனாலும், யாருக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்பதையும், அந்த வெகுமதி என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், அதைக் கொடுப்பவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். அந்த வெகுமதியைப் பெற, ஒருவரும் தேவனிடம் செல்வாக்கு செலுத்த முடியாது. ஆனால், நீங்கள் ஒரு காரியம் செய்யலாம்: "எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். நீங்கள் சேவிக்கிற எஜமான் கிறிஸ்து என்பதையும், கர்த்தரே உங்களுக்கு சுதந்தரமாகிய பலனைத் தருவார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்" (கொலோ. 3:23-24).
மனிதரைப் பிரியப்படுத்துகிறதற்காகவும், வெகுமதிக்காகவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
மனிதர்களிடம் செல்வாக்கு செலுத்தி, பூமியிலே பல விருதுகளை நாம் வெல்லலாம். ஆனால், பரலோகத்திலுள்ள விருதை வெல்ல, நம் செல்வாக்கு தேவனிடம் செல்லுபடி ஆகாது!
ஜெபம்: கர்த்தாவே, நான் ஒரு விருதை வெல்கிறேனோ இல்லையோ, உமக்கும் பிறருக்கும் உண்மையாய் சேவை செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!
Comments
Post a Comment