விஷத்தை உமிழ்கிறீரா?
B. A. Manakala
சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.... செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப் போல் இருக்கிறார்கள். சங். 58:4,5.
மனைவி தன் கணவரிடம், "நீங்கள் ஒருபோதும் என்னைப் பற்றி ஒரு நல்வார்த்தையும் சொல்கிறதே இல்லை!" என்றாள். "உன்னிடம் ஏதாவது ஒரு விஷயம் நல்லதாய் இருக்கிறதா என்ன?" என்று அவர் பதில் உரைத்தார்!
மேலுள்ள வசனம், கொடிய சர்ப்பங்களைப் போல விஷத்தை உமிழ்கிற பொல்லாத ஜனங்களைப் பற்றிப் பேசுகிறது (58:4).
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடமும், பிறரிடமும் எவ்விதம் பேசுகிறீர்கள்? தேவ பக்தியுள்ளவர்கள் தங்கள் சொற்களாலும், செயல்களாலும், எப்போதும் பிறரை ஆசீர்வதிப்பார்கள். ஏனென்றால், தேவன் அவர்களில் கிரியை செய்கிறார்.
உங்கள் வார்த்தைகளால் பிறரை ஆசீர்வதிக்க வேண்டுமென்றே நீங்கள் பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருக்கிறீர்களா?
பொல்லாத இருதயத்திலிருந்து மட்டுமே விஷம் நிறைந்த வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன; அவைகள் அழிவை ஏற்படுத்துகின்றன.
ஜெபம்: கர்த்தாவே, என் வார்த்தைகளால் பிறரை ஆசீர்வதிக்க, எப்போதும் உமது ஆவியால் எனக்கு நினைவூட்டும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment