நம்பிக்கையோடிருங்கள்!
B. A. Manakala
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன். சங். 57:7.
ஒரு குட்டி கங்காரு, தன் தாயின் வயிற்றிலுள்ள பைக்குள் இருக்கையில், மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறது.
நம்பிக்கையோடிருப்பதா? ஆனால் எப்படி? யார் மீது? தாவீதின் நம்பிக்கை கர்த்தர் மீது இருந்தது (57:7). அவர் கோலியாத்தைத் தோற்கடிக்கையில், அது வெளிப்படையானது.
உங்கள் சுய புத்தியைச் சாராதிருங்கள் (நீதி. 3:5). ஏனெனில், அது முட்டாள்தனமாகி விடும் (28:26). எரேமியா 17:7 இவ்வாறு கூறுகிறது: "கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்."
நம்பிக்கையோடிருங்கள், ஏனென்றால், உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை... முடிய நடத்தி வருவார் (பிலி. 1:5).
உங்கள் நம்பிக்கையின் அளவை உயர்த்துவதற்கு, நீங்கள் கர்த்தரை எங்ஙனம் நம்புவீர்கள்?
தன்னம்பிக்கை ஒருவேளை உங்களை ஓர் நாள் ஏமாற்றலாம்; தேவன் ஏமாற்ற மாட்டார்!
ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உம் மீது நம்பிக்கையுடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment