தீவிர பராமரிப்பு!
B. A. Manakala
என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி, உயர்ந்த அடைக்கலத்திலே வையும். சங். 59:1.
தேவனுடைய பணியை நிறைவேற்றுகிறதிலே, நான் செய்கிறது எவ்வளவு சொற்பமும், அற்பமுமாய் இருக்கிறது என்று நான் அடிக்கடி சிந்திக்கிறதுண்டு. ஆனாலும், நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கிற 'அந்த சொற்பத்தையே' நீங்களும் நானும் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
தாவீது, தனது சொந்த பாதுகாப்பிற்காக, தேவனிடத்தில் ஜெபிக்கிறார் (சங் 59:1). அவர் ஜெபிக்காவிட்டால், தேவன் அவரைப் பாதுகாக்க மாட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் ஜெபிக்காவிட்டாலும், அல்லது அவருக்கு ஊழியம் செய்யாவிட்டாலும், அவருடைய பணி நிறுத்தப்படாது. ஆனால், ஜாக்கிரதை! ஜெபிக்காமலும், ஊழியம் செய்யாமலும் இருப்பதற்கான உரிமமாக அதை எடுத்துக் கொள்ளாதிருங்கள். நம்முடைய ஜெபத்திலும், ஆராதனையிலும் நாம் பெருமை கொள்ள முடியாது.
தேவன் நமது கோட்டையும், பெலனுமானவர் (சங் 18:2); அவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை (சங். 121:4). அவர் எப்போதும் உங்களோடே இருக்கிறார் (யோசு. 1:9).
உங்களுக்கு தேவனின் இடையறாத பராமரிப்பு இருக்கிறதை நீங்கள் கண்டுணர்கிறீர்களா?
தேவ பாதுகாவல் உங்கள் மீது 24x7 இருக்கிறது... ஆனால் அது நீங்கள் 24x7 ஜெபிக்கிறீர்கள் என்பதனால் அல்ல!
ஜெபம்: கர்த்தாவே, அதிகமாய் ஜெபிக்க எனக்கு உதவி செய்யும். மேலும், எனது ஜெபத்தைப் பொருட்படுத்தாமல், உமது பராமரிப்பு இடைவிடாமல் எனக்கு இருக்கிறது என்பதை இன்னும் புரிந்து கொள்ளவும் எனக்கு உதவும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment